வாகனங்களால் விபத்து அபாயம்

சிவகாசி, ஏப்.20: சிவகாசி பகுதியில் சரக்கு வாகனங்கள் சாலை விதியை மீறி, அளவுக்கு அதிகமாக பாரத்தை ஏற்றிக் கொண்டு செல்வது அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதோடு விபத்து அபாயமும் நீடித்து வருகிறது.

சாலையை அடைத்துக்கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களினால் சிவகாசியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, மற்ற வாகனங்களில் செல்வோர் மீது, குப்பைகள் படர்ந்து மாசு ஏற்படுகிறது. எனவே, விதிமுறைகளை மீறி, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: