தூத்துக்குடி, ஏப். 20: தூத்துக்குடி மாவட்டத்தில், தேர்தல் பறக்கும் படையினரால், இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,30,18,618 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஷூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு, காவல்துறை, மதுவிலக்கு காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
