மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

 

அம்பை, ஏப்.20: தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்பத்தை தணிக்க மக்கள் நீர்நிலைகளை தேடி அலைகின்றனர். மணிமுத்தாறு அருவியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறை தினமான நேற்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் குவிந்தனர். தமிழகத்தில் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு குறிப்பாக நீர் நிலைகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

Related Stories: