விஜய்க்கு ஓட்டு போட்டு வேஸ்ட் பண்ணாதீங்க: அன்புமணி அட்வைஸ்

 

மயிலாடுதுறை பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக கடலூர் வெள்ளிக்கடற்கரையில் அவர் அளித்த பேட்டி: இந்த தேர்தலில் விஜய் அதிக வாக்குகளை வாங்குவார். ஆனால் வெற்றி பெற முடியாது. எனவே, உங்கள் வாக்குகள் வீணாக்கப்பட வேண்டாம். விஜய் ரசிகர்கள் விஜய்க்கு தான் ஓட்டு போடுவார்கள், அவர்களை நான் கேட்கவில்லை, விஜய்யின் ஆதரவாளர்களுக்கு நான் சொல்கிறேன். உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால் உங்கள் தலைவர் விஜய்யின் கனவு நிறைவேறும்.

2016ல் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று நான் தனியாக நின்ற போது மக்கள் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். ஆனால் அன்புமணியால் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்பதால் பலர் அதிமுகவுக்கு வாக்களித்தார்கள். விஜய்யின் ஆதரவாளர்களுக்கு நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நோக்கம் நிறைவேற வேண்டுமானால் அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: