வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அதிமுகவினர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேத்திடல் பகுதியில் நேற்று அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் பரவியது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பணம் பட்டுவாடா செய்ய இருந்த அதிமுகவினரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

அந்த பணத்தை அதிகாரிகள் எண்ணிக் கொண்டிருந்தபோது, ஆர்.எஸ்.மங்கலம் அதிமுக மத்திய ஒன்றியச் செயலாளர் கருப்பையா, பறக்கும் படை அதிகாரிகளுடன் பிரச்னையில் ஈடுபட்டு விட்டு ஓடி விட்டார். இதுகுறித்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர் நவீன் கொடுத்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சத்தீஸ்வரன், சரவணன், தங்கம் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஒன்றியச் செயலாளர் கருப்பையா உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.

 

Related Stories: