மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து கோவை ராஜவீதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, கமல்ஹாசன் பேசியதாவது: தமிழக அரசியல் சரித்தரத்தில் ஒரு புதிய மாற்றத்தை கோவை உருவாக்க போகிறது. இது திமுகவின் கோட்டையாக மாற போகிறது. தெற்கு தொகுதியில் ஏற்கனவே போட்டி போட்டு கொண்டு இருந்தவர் ஒதுங்கி போய் வேறு இடத்திற்கு சென்றது தான் செந்தில்பாலாஜியின் வெற்றிக்கான சாட்சி.
தமிழ்நாடோட மிரட்டல் எப்படி இருக்கும் என்பதை நாங்க பாராளுமன்றத்துல செய்து காட்டிட்டோம். இப்ப இருக்கிற இந்த 543-ல், 33 சதவீதம் கொண்டுவர வேண்டியது என் கடமை. கமல்ஹாசனின் வாக்குறுதி இது. இதற்காக நான் போராடுவேன் என்பது தான் நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதி. என்னுடைய போராட்டம் அங்கேயே இருக்கும். செந்தில்பாலாஜியின் போராட்டம் இங்கே இந்த தொகுதியில் மக்களுக்காக தொடர்ந்து கொண்டே இருக்கும்.
வடவர் படையெடுப்பை முறியடிப்போம். வந்தாரை வாழவைக்கும் தமிழகம். ஆனால் இங்கே வாகை சூட வந்தால், பதிலடி கொடுக்கும் தமிழகம். வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் நாங்கள். ஆனால் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதை 23-ம் தேதி செய்து காண்பிப்பீர்கள். அதனை வாக்குறுதியாக எனக்கு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
