பல பெண்களுடன் ஆதவ்வுக்கு தொடர்பு: உண்மையை போட்டு உடைத்த மச்சான்

 

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமாரோஸின் மகனும், லட்சிய ஜனநாயக கட்சி தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: என் மச்சான் ஆதவ் அர்ஜூனாவின் நடவடிக்கைகள் எதுவும் சமீப காலங்களாக சரியாக இல்லை.

அவர் மீது தொடர்ந்து எங்களுக்கு சந்தேகம் இருந்து கொண்டுதான் உள்ளது. ஆதவ் அர்ஜூனா நிற்கும் தொகுதியில் தோற்க போவது நிச்சயம். இது தெரிந்ததால் என் தாயும், அவரது சொந்த மாமியாருமான லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸை எப்படியாவது தோற்கடிக்க செய்ய வேண்டும் என நினைக்கிறார்.

இதற்காக அவரது நண்பர்கள் சிலர் சமீபத்தில் லால்குடி தொகுதியில் கூடி, சதித்திட்டங்களை தீட்டியது குறித்த தகவல்களும் எங்களுக்கு வந்துள்ளது. எந்த சதித்திட்டத்தையும் நாங்கள் முறியடித்து வெற்றி பெறுவோம். திருமண உறவை கடந்து என் மச்சான் ஆதவ் அர்ஜூனா பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார். கார்கள் கூட கிப்ட் ஆக வாங்கி தந்துள்ளார். நிறைய பெண்களுடன் அவருக்கு தொடர்பு உண்டு. குடும்பத்தை ஒழுங்காக பார்க்க துப்பு இல்லாத மனிதர் அவர். இவ்வாறு அவர் கூறினார்.

* ஆதவ் அர்ஜூனா என்பது உண்மை பெயர் அல்ல…

இதுவரை வெளிவராத தகவல் ஒன்றை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘என் மச்சானின் பெயர் ஆதவ் அர்ஜூனா அல்ல…. அவரது உண்மையான பெயர் செந்தில்குமார்…. அவர் சொல்வது எல்லாமே பொய். பெயரில் கூட ஊழல் செய்துள்ளார்” என தெரிவித்தார்.

Related Stories: