செங்கோட்டை பள்ளிவாசல் ஜமாத் முக்கியஸ்தர்களிடம் கிருஷ்ணமுரளி ஆதரவு திரட்டினார்

செங்கோட்டை,ஏப்.19: தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா செங்கோட்டை நகர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன் ஒரு பகுதியாக, செங்கோட்டையில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை முன்னிட்டு ஜமாத் முக்கியஸ்தர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Related Stories: