ஆண்டிமடம் வட்டாரத்தில் மண்வள மேம்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

ஜெயங்கொண்டம், பிப்.23: ஆண்டிமடம் வட்டாரத்தில் அழகாபுரம் மற்றும் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமங்களில் அட்மா திட்டத்தின் கீழ் கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மண் வளத்தை மேம்படுத்த ஏக்கருக்கு 15 முதல் 20 கிலோ சணப்பு அல்லது தக்கைப்பூண்டு விதைத்து மடக்கி உழுதல், ஊட்டமேற்றிய முறையில் தொழு உரத்தை பயன்படுத்துதல், நுண்சத்து பற்றாக்குறையை நீக்க ஏக்கருக்கு 5 கிலோ நுண்சத்து உரமிடுதல் , ஊடுபயிர் மற்றும் வரப்பு பயிர் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த முறையில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்த உயிர் பூஞ்சாணக் கொல்லிகள், மஞ்சள் வண்ண அட்டை, விளக்குப்பொறி, இனக்கவர்ச்சி பொறிகள் முதலியவைகளை உபயோகிக்கும் முறைகள் தெரிவிக்கப்பட்டது. பயிற்சியின் முடிவில் தற்போது முந்திரியில் பின்பற்ற வேண்டிய பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் மற்றும் நித்தீஸ்வரன் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: