மக்கள் தொகையில் பாதி பேர் தங்களுக்குரிய பங்கை பெறுவதற்கான நேரம் வந்து விட்டது: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: அரசியலமைப்பு சட்ட 131வது திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக முன்மொழியப்பட்ட சட்டம், அவர்களுக்கு நீதி வழங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பு ஆகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். உங்கள் சொந்தக் குடும்பங்களில் உள்ள பெண்களை நினைத்து, உங்கள் மனசாட்சியைச் சிந்தித்துப் பாருங்கள்.

நமது நாரி சக்திக்கான புதிய வாய்ப்புகளைத் தயவுசெய்து பறிக்காதீர்கள். சட்டம் தொடர்பான அனைத்து அச்சங்களையும் தவறான புரிதல்களையும் அரசு நிவர்த்தி செய்துள்ளது. கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக, சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற இந்த விவகாரம் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் மக்கள்தொகையில் பாதிப் பேர் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் தங்களுக்குரிய நியாயமான பங்கைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டிய தருணம் இது.

சுதந்திரம் அடைந்து இத்தனை தசாப்தங்கள் கடந்த பின்னரும், இந்தியாவில் பெண்களுக்கு இந்தத் துறையில் இவ்வளவு குறைந்த பிரதிநிதித்துவம் இருப்பது சரியல்ல கோடிக்கணக்கான பெண்கள் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நமது நோக்கத்தையும் முடிவுகளையும். நாரி சக்தி வந்தன் அதினியம் சட்டத்தில் கொண்டுவரப்படும் திருத்தங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: