அந்நிய செலாவணி விதிமீறல் பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா வீட்டில் ஈடி ரெய்டு

புதுடெல்லி: பங்கு சந்தைகளில் நடைபெற்றதாக கூறப்படும் உள்வர்த்தகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு சூதாட்ட நிதியை சட்டவிரோதமாக திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக அந்நிய செலாவணி விதிமீறல் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக பஞ்சாப் தொழில்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா, அவரது மகன் மற்றும் சிலரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். லூதியானா, ஜலந்தர், குருகிராம் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள மொத்தம் 13 குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

லூதியானாவில் அமைச்சர் அரோராவின் வீடு, அலுவலகம், அவரது ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அரோராவின் மகனும், ரியல் எஸ்டே் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கவ்யா அரோராவின் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. நிதி முதலீடு மற்றும் பங்கு தகு நிறுவனத்தின் உரிமையாளர் ஹேமந்த் சூட், ஜலந்தரை சேர்ந்த தொழிலதிபர் சந்திரசேகர் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

Related Stories: