திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் முதல் நடவடிக்கையாக இரட்டைகுளம் கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்

சுரண்டை,ஏப்.17: திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் முதல் நிகழ்ச்சியாக இரட்டை குளம் கால்வாய் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்படும் என தென்காசி தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன் உறுதியளித்தார். தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீராணம், அகரம், குறிச்சாம்பட்டி, கரையாளனூர் ஆகிய பகுதிகளில் டாக்டர் கலை கதிரவன் உதயசூரியன் சின்னத்திற்கு ஒன்றிய செயலாளர் வீராணம் சேக் முகம்மது முன்னிலையில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களால் பயன்பெறாத வீடுகளே இல்லை எனலாம். திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அனைத்து திட்டங்களிலும் இரட்டிப்பான பயன் கிடைக்கும்.

மகளிர் உரிமை தொகை இரண்டாயிரமாக உயர்த்தி தரப்படும். திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் முதல் நிகழ்ச்சியாக இரட்டைகுளம் கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பேசப்படும் திட்டமாக உள்ளது. அதேபோல் இல்லத்தரசி திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் எட்டாயிரம் கூப்பன் வழங்கப்படும். வீட்டிற்க்கு தேவையான பொருட்களை பெண்களே வாங்கிக்கொள்ளலாம். தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் விதமாக தொகுதி மறுவரை என்ற பெயரில் தமிழ்நாட்டின் பாஜ அநீதி இழைக்கிறது.
அதற்கு எடப்பாடியின் அதிமுக துணை போகிறது. இந்தியாவிலேயே ஒன்றிய அரசை எதிர்க்கும் வல்லமை பெற்ற ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். தமிழக உரிமையை பாதுகாக்கவும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன், கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன், மாணிக்கவாசகம், இருதாலய மருதப்பபாண்டியன், பாலசுப்பிரமணியன், பூல் பாண்டியன், செல்லதுரைச்சி, சுகந்தி, ராம்குமார், சுரேஷ், சின்னத்துரை, ஹமீது ஜலாலுதீன், முகமது அலி, அமானுல்லா, சதாம் உசேன், சிந்தா மதர்,சேக் மைதீன், ஊராட்சி மன்ற தலைவர் மகரஜோதி சரவணன், இளைஞர் அணி திருமலைக்குமார்உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வனத்துறை ஊழியர் மீது தாக்குதல் களக்காடு, ஏப்.17: மருதன்வாழ்வை சேர்ந்தவர் கண்ணன் மகன் கவுதம் (30). இவர் களக்காடு வனத்துறையில் வனக்காப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கவுதம் களக்காடு கோவில்பத்தில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார். மாலையில் கவுதம் பணி முடிந்து வீட்டிற்கு பைக்கில் கோவில்பத்திற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். களக்காடு புதுத்தெரு ஆலமரம் அருகில் சென்ற போது, எதிரே ஆற்றாங்கரை தெருவை சேர்ந்த கண்ணன் மகன் அஸ்வின் (26) என்பவர் ஓட்டி வந்த பைக் கவுதம் சென்ற பைக் மீது மோதியது. இதையடுத்து இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அஸ்வின் உள்பட சிலர் சேர்ந்து கவுதமை கற்களால் சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார், அஸ்வின் உள்பட 5க்கும் மேற்பட்டவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: