10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 100% தேர்ச்சி

ஆறுமுகநேரி, ஏப். 17: ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 130 மாணவ- மாணவியரும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி மது சாந்தனா 500க்கு 487 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், மாணவர் அர்ஜூன் ஆதித்யா இரண்டாமிடமும், மாணவி ஜாப்லின் 483 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். மாணவியர் மது சாந்தனா, ஜாப்லின் மற்றும் மாணவன் நிஜன் ஆகிய 3 பேர் தமிழ் பாடப்பிரிவில் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை படைத்த மாணவ- மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி சேர்மன் சுப்பையா தலைமை வகித்தார். அன்பு அம்மாள் அறக்கட்டளை பொருளாளர் உஷா தேவி சுப்பையா, பள்ளியின் பொதுமேலாளரும், பெர்ல்ஸ் அகாடமி நிறுவன இயக்குநருமான மபத்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் கிறிஸ்டினா பிரபாகரன் வரவேற்றார். தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியரை பாராட்டினர். தமிழ் பாடப் பிரிவில் 100 மதிப்பெண்கள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியைக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் துணை முதல்வர் பெலிக்ஸ் நன்றி கூறினார்.

Related Stories: