×

6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவி பேட் 2ம் கட்ட ஒதுக்கீடு பணி

கிருஷ்ணகிரி, ஏப்.14: கிருஷ்ணகிரியில், 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் 2ம் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் தாம் அளித்த வாக்கை சரிபார்க்கும் கருவி(விவி பேட்) 2வது கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்தது. தேர்தல் பொது பார்வையாளர்கள் அனில்குமார், சவுரவ்பாபு, பன்வே ராகுல் துக்காராம், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். அப்போது கலெக்டர் கூறியதாவது:

தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை அமைப்பு மூலம், வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் கருவிகளை 2ம் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஊத்தங்கரை(தனி) தொகுதியில் உள்ள 319 வாக்குச்சாவடி மையங்களுக்கு 382 பேலட் யூனிட், 382 கண்ட்ரோல் யூனிட், 414 விவி பேட் என மொத்தம் 1178 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் ஒதுக்கப்பட்டுள்ளது. பர்கூர் தொகுதியில் உள்ள 324 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 388 பேலட் யூனிட், 388 கண்ட்ரோல் யூனிட், 414 விவி பேட் என மொத்தம் 1197 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கிருஷ்ணகிரி தொகுதியில் உள்ள 340 வாக்குச்சாவடி மையங்களுக்கு 408 பேலட் யூனிட், 408 கண்ட்ரோல் யூனிட், 442 விவிபேட் என மொத்தம் 1258 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் ஒதுக்கப்பட்டுள்ளது. வேப்பனஹள்ளி தொகுதியில் உள்ள 343 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 411 பேலட் யூனிட், 411 கண்ட்ரோல் யூனிட், 445 விவி பேட் என 1267 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓசூர் தொகுதியில் உள்ள 446 வாக்குச்சாவடி மையங்களுக்கு 534 பேலட் யூனிட், 534 கண்ட்ரோல் யூனிட், 578 விவி பேட் என 1646 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் ஒதுக்கப்பட்டுள்ளது.

தளி தொகுதியில் உள்ள 321 வாக்குச்சாவடி மையங்களுக்கு 385 பேலட் யூனிட், 385 கண்ட்ரோல் யூனிட், 417 விவிபேட் என 1187 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் ஒதுக்கப்பட்டுள்ளது. 6 தொகுதிகளில் உள்ள 2093 வாக்குச்சாவடி மையங்களுக்கு 2508 பேலட் யூனிட், 2508 கண்ட்ரோல் யூனிட், 2717 விவி பேட் என மொத்தம் 7733 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பட்டியல்கள், போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த இயந்திரங்கள் வாக்குப்பதிவு நாளன்று, ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், டிஆர்ஓ சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) ஹெலன் ராணி, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆக்ரிதி சேத்தி, சிவக்குமார், அபிநயா, ஷாஜகான், கீதா ராணி, பழனி, கூடுதல் கலெக்டர்(பயிற்சி) க்ரிதி காம்னா, துணை கலெக்டர்(பயிற்சி) சவுமியா, தனி தாசில்தார்(தேர்தல்) சம்பத் மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Krishnagiri ,Krishnagiri District Collector's Office ,
× RELATED மாமரங்களில் காய் பிடிப்பு அதிகரிப்பு