×

சினிமா தியேட்டரில் திடீர் தீ

கிருஷ்ணகிரி, ஏப்.11: கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் எற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரி கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான சினிமா தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இந்த தியேட்டரில் ஏ.சி., வசதியுடன் சமீபத்தில் புதுப்பித்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏ.சி.,யில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தியேட்டரில் இருந்து கரும்புகை வெளியே வந்ததை அடுத்து, அருகில் மார்கெட்டில் இருந்த காய்கறி வியாபாரிகள் கொடுத்த தகவல் படி, கிருஷ்ணகிரி தீயணைப்பு வீர்ர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தியேட்டரின் திரை, ஏ.சி., ஒயர்கள், மேற்கூரையின் ஒரு பகுதி ஆகியவை கருகின. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என போலீசார் கூறினர். இந்த தீ விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Krishnagiri ,Srinivasan ,Krishnagiri Co ,
× RELATED 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மின்னணு...