×

டாஸ்மாக் கடை அருகில் தொழிலாளி திடீர் சாவு

கிருஷ்ணகிரி, ஏப்.13: வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தரணிதரன்(46). இவர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், சமையலராக வேலை பார்த்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் கொண்ட தரணிதரன், கடந்த மாதம் 24ம் தேதி, கிருஷ்ணகிரிக்கு வந்த இடத்தில், புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது, மது போதையில் தவறி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி தரணிதரன் உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து
வருகின்றனர்.

Tags : TASMAC ,Krishnagiri ,Dharanitharan ,Kudiyatham ,Vellore district ,Kuppam ,Andhra Pradesh ,
× RELATED 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மின்னணு...