×

சிறுவர், சிறுமியர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி, ஏப். 12: கிருஷ்ணகிரியில் சிறுவர், சிறுமியர்களுக்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் வருகிற 17ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு பிரிவில் 2026ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான 15 நாட்கள் இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம், சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு வருகிற 17ம் தேதி முதல் மே மாதம் 1ம் தேதி வரை காலை மற்றும் மாலை வேளைகளில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

மேற்படி பயிற்சி முகாமில் தடகளம், கைப்பந்து, டேக்வாண்டோ, குத்துச்சண்டை, ஜூடோ, கூடைப்பந்து, சிலம்பம் மற்றும் கால்பந்து விளையாட்டு போட்டிகளுக்கு சிறந்த பயிற்றுநர்களை கொண்டு இலவச பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு, பயிற்சியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் வழங்கப்படும். மேலும், முகாமில் கலந்து கொள்பவர்கள், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அந்தந்த பயிற்றுநர்களிடம் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் அனைவரும் ஆதார் கார்டு நகல் கண்டிப்பாக சமர்பித்தல் வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Krishnagiri ,Krishnagiri District ,Collector ,Dinesh Kumar ,Tamil Nadu… ,
× RELATED 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மின்னணு...