கும்பகோணத்தில் மாசிமக பெருவிழா ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சுவாமிகள் வீதியுலா

கும்பகோணம், பிப்.21: மாசிமக பெருவிழாவின் நான்காம் நாளான நேற்று கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் 63 நாயன்மார்கள் மற்றும் பஞ்சமூர்த்திகள் வெள்ளி பல்லாக்கில் வீதியுலா நடைபெற்றது.

12 ஆண்டுகளுக்கு ஓர்முறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகபெருவிழா உலக பிரசித்தி பெற்றது. அதை தவிர்த்து ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா, 10 தினங்களுக்கு 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் என ஒருசேர நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இந்த மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெறு வருகிறது.

விழாவின் நான்காம் நாளான நேற்று சைவ தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் இருந்து சேக்கிழார் பெருமான் உள்ளிட்ட 63 நாயன்மார்கள் வரிசையாக தனித்தனி வாகனங்களிலும், பல்லாக்கில் உற்சவர் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகையுடன் எழுந்தருளி உலா வந்தனர். தொடர்ந்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி உலா வந்தனர் வருடாவருடம் இரட்டை வழிப் பாதையாக செல்லும் 63 நாயன்மார்கள் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை திட்டத்தின் தோண்டப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் 4 வீதிகளில் மட்டுமே வீதியுலா நடைபெற்றது. இதனால் இரட்டை வழிப்பாதையில் உள்ள பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: