நங்கநல்லூரில் உயர்மட்ட மின் கம்பிகளை மின் புதைவடமாக மாற்றித்தருவேன்

ஆலந்தூர், ஏப்.14: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ அன்பரசன் நேற்று நங்கநல்லூர் முதல் பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஆலந்தூர் தெற்கு பகுதி கூட்டணி தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் என்.சந்திரன் சுற்றுச்சூழல் பிரிவு மாநில துணை தலைவர் சாயஜெயகாந்த், கவுன்சிலர் துர்காதேவி நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து வேட்பாளர் தா.மோ.அன்பரசன் நங்கநல்லூர் லட்சுமி நகர், வோல்டாஸ் காலனி, கன்னிகா காலனி போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அன்பரசன் பேசுகையில், ரூ,32 கோடி மதிப்பீட்டில் ஆலந்தூர் புது தெருவில் மண்டல அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது, ஏழை மக்களுக்காக, ரூ.18 கோடி செலவில் திருமண மண்டபத்தை கட்டியுள்ளோம். ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணாபுரத்திலும் ஒரு திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பட்டா பிரசனை உள்ளது. அடங்கலில் உங்கள் பகுதி அரசு புறம்போக்கு மனையாக இருந்தது. தற்போது ரயாத்வராரியா மாற்றி பட்டா வழங்கியுள்ளோம். என்னை தேர்ந்தெடுத்தால் இந்தப் பகுதியில் உள்ள உயர்மட்ட மின் கம்பிகளை மின் புதைவடமாக மாற்றித் தருவேன். எனவே, எனக்கு வாக்களிக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு பேசினார்.

வாக்கு சேகரிப்பின் போது திமுக வட்ட செயலாளர்கள் ஜெ.நடராஜன் ஏசுதாஸ், உலகநாதன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், அணிகளின் சார்பாக ஜெயராம் மார்த்தாண்டன், கே.கே.சண்முகம், தரணி வேந்தன், எஸ்.காஜா மொய்தீன் பாரூக், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி சத்யா, மணிகண்டன், விஜய் பாபு பேராசிரியர் சீனிவாசன், சதீஷ் காங்கிரஸ் நிர்வாகிகள் அய்யம்பெருமாள், சுதாபிரசாத், ஆதம் ரமேஷ், சக்திவேல், தேமுதிக பகுதி செயலாளர் நாராயணன், மதிமுக பகுதி செயலாளர் கத்திப்பாரா சின்னவன் உட்பட பலர் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

Related Stories: