நைஜீரிய விமானப்படை தாக்குதல்: 100 பேர் பலி

அபுஜா: வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜிஹாதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் உள்ளது. அங்கு வாழும் மக்கள் மீது இவர்கள் அடக்குமுறைகளை ஏவுவதாக கூறப்படுகிறது. இதனால், ஜிஹாதிகள் மீது அந்த நாட்டு விமானப்படை அடிக்கடி தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பதிலாக தவறுதலாக அங்குள்ள மார்க்கெட் பகுதியில் விமானப்படை, தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இது தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை அந்த நாட்டின் விமானப்படை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Related Stories: