திமுகவுக்கு ஆதரவாக களத்தில் குதித்த மாற்றுத்திறனாளிகள்: இணைப்பு சக்கர வண்டிகளில் வாக்கு சேகரிப்பு

சென்னை: திமுகவுக்கு ஆதரவாக மாற்றுத்திறனாளிகள் களத்தில் குதித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். திமுக அரசு செய்த சாதனை திட்டங்களை சொல்லி மாற்று திறனாளிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றகர். அவர்களின் பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதாவது சென்னை தி.நகர் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனை ஆதரித்து திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநில தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவருமான ரெ.தங்கம் தலைமையில் 100க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இணைப்பு சக்கர வண்டிகளில் இல்லம் தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் போது மாநில மாற்றுத்திறனாளிகள் அணி துணை செயலாளர்கள் க.எழிலன், எம்.பிரசாத், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளர் க.இளங்கோவன், இணை பொதுச் செயலாளர் பா.சந்தானகிருஷ்ணன், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.நசிம், பட்டுக்கோட்டை வீர.சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: