×

அரசியலமைப்பை மாற்ற பாஜ, ஆர்எஸ்எஸ் திட்டம் ஜனநாயகத்தை ஒழித்து சர்வாதிகாரத்தை புகுத்த முயற்சி: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி குற்றச்சாட்டு

பாட்னா: ஆர்ஜேடியின் சிறுபான்மை பிரிவு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு பேசுகையில்,ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ, இந்திய அரசியலமைப்பிற்குப் பதிலாக ஆர்எஸ்எஸ்ன் அரசியலமைப்பைக் கொண்டுவர விரும்புகின்றன. அவர்கள் ஜனநாயகத்தை ஒழித்து, சர்வாதிகாரத்தை நிறுவ முற்படுகிறார்கள். எங்களுக்கு இது போராட்டத்திற்கான நேரம். இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டால், அவை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் மற்றும் பிற விளிம்புநிலை சமூகத்தினரைப் பாதிக்கும். மதவாத சக்திகளின் பிரித்தாளும் கொள்கையை எதிர்த்து கட்சி தொண்டர்கள் போராட வேண்டும். இந்துவோ முஸ்லிமோ,என்னையும் சேர்த்து, எந்தவொரு தலைவரும் தூண்டிவிடும் உரை ஆற்றினாலோ அல்லது மதவாத அரசியலில் ஈடுபட்டாலோ, அவர்கள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.நாட்டில் மோதலைத் தூண்டிவிட்டு, அமைதியையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைக்க பாஜவும் ஆர்எஸ்எஸ்சும் செயல்பட்டு வருகிறது என்றார்.

Tags : BJP ,RSS ,RJD ,Tejashwi ,Patna ,Tejashwi Yadav ,
× RELATED மற்றவர்கள் மதிக்க வேண்டும்...