×

அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் கார் நிறுத்துமிடத்தில் இறங்கியதால் பரபரப்பு

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜன் புஜ்பால் உணவு பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று மகாத்மா புலே பிறந்த தினத்தையொட்டி புரந்தர் தாலுகாவில் உள்ள கான்வாடி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்றார். சஜன் புஜ்பால் சென்ற ஹெலிகாப்டர் கான்வாடியில் உள்ள ஹெலிபேடில் தரை இறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குளறுபடிகள் காரணமாக ஹெலிபேடில் தரையிறக்க முடியவில்லை. இதையடுத்து அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் அருகிலிருந்த கார் நிறுத்துமிடத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

Tags : Pune ,Sajan Bhujpal ,Nationalist Congress Party ,Maharashtra ,Food Security ,Minister ,Khanwadi ,Purandar taluka ,Mahatma Phule ,
× RELATED புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத்தில்...