×

பல்வேறு வழக்குகளில் தொடர்பு தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட தாதா: அரியானா போலீஸ் கைது

புதுடெல்லி: பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரும், இன்டர்போலின் ரெட் நோட்டீஸ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவருமான தாதா சஹில் சவுகான், தாய்லாந்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.நேற்று காலையில் அவர் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குக் அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து அரியானா காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் அவரை குருகிராமில் உள்ள போண்ட்ஸி தலைமையகத்திற்கு அழைத்துச் சென்றதாக அதிகாரிகள் கூறினர்.

அம்பாலாவின் ஷாஜாத் பூரைச் சேர்ந்த சவுகான், 2016ஆம் ஆண்டில் தனது முதல் குற்றத்தைச் செய்தார். கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 16 குற்ற வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தார். 2024ஆம் ஆண்டில், ஒரு போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அவர் பெங்களூரிலிருந்து வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றார். அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்த அவர், சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்து சென்றார். அங்கு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் அங்கித் ஷோகீன், அமன் பைன்ஸ்வால், சோம்பீர் மோட்டா மற்றும் ஷிலு தஹார் ஆகியோர் தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

Tags : Dada ,Thailand ,Haryana Police ,New Delhi ,Dada Sahil Chauhan ,Interpol ,India ,Delhi ,Indira Gandhi International Airport ,
× RELATED புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத்தில்...