×

ஆலப்புழா மாவட்ட பாஜ துணைத் தலைவிக்கு மிரட்டல்: பாலக்காடு பாஜ வேட்பாளர் மீது போலீசில் புகார்

திருவனந்தபுரம்: பாலக்காடு தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டவர் ஷோபா சுரேந்திரன். தேர்தலுக்கு சில நாட்கள் முன் இந்தத் தொகுதிக்குட்பட்ட தருவக்குறிச்சி பகுதியில் ஒரு மூதாட்டிக்கு பாஜ சார்பில் ரூ. 5 ஆயிரம் பணம் கொடுத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேட்பாளர் ஷோபா சுரேந்திரனுடன் சென்ற ஒரு பெண்தான் அந்த மூதாட்டிக்கு பணம் கொடுத்தார் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால் அதை ஷோபா சுரேந்திரன் மறுத்தார். தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீட்டிய சதி என்று அவர் கூறினார். இந்நிலையில் ஆலப்புழா வடக்கு மாவட்ட பாஜ துணைத் தலைவியான பிந்து என்பவரை ஷோபா சுரேந்திரன் போனில் மிரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிந்து கூறியதாவது: ஷோபா சுரேந்திரன் எனக்கு போன் செய்து வாக்காளருக்கு பணம் கொடுத்த சம்பவத்தில் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். நான் தான் சதி செய்து அவரை சிக்க வைத்ததாகவும், இது தொடர்பாக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறிய அவர், எனக்கும், என்னுடைய கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக ஆலப்புழா எஸ்பியிடம் புகார் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் பிந்துவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து கேரள பாஜ தலைமை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : Alappuzha district ,BJP ,president ,Palakkad ,Thiruvananthapuram ,Shobha Surendran ,Tharuvakurichi ,
× RELATED புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத்தில்...