×

பாஜ ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் அமல்

ஜாங்கிபூர்: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜாங்கிபூரில் நடந்த பாஜ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது, ” வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் மேற்கு வங்கத்தின் அடையாளம் மற்றும் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான ஒரு போர் போன்றது. அதே நேரம் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் ஊடுருவல்காரர்களின் ஆதரவை நம்பியே செழித்து வருகின்றது. நாட்டின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. திருப்திபடுத்தும் அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதே பாஜவின் உறுதியான சங்கல்பமாகும்” என்றார்.

தொடர்ந்து வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள தெற்கு தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குஷ்மண்டியில் நடந்த பாஜ பிரசாரக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசை விமர்சித்தார். மேலும் கால்பந்து விளையாட்டை திரிணாமுல் காங்கிரஸ் தனது சிண்டிகேட்களிடம் ஒப்படைத்துவிட்டது. மேற்கு வங்கம் என்றாலே சட்டவிரோதச் செயல்களுக்கு பெயர் பெற்ற மாநிலமாக மாறிவிட்டது. மேற்கு வங்கத்தில் சிண்டிகேட் தான் அரசாங்கங்கள். அரசு தான் சிண்டிகேட்” என்றார்.

Tags : West Bengal ,BJP ,Jangipur ,Modi ,Murshidabad ,Modi… ,
× RELATED புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத்தில்...