மார்த்தாண்டம் அருகே பைக் விபத்தில் 2 பேர் படுகாயம்

மார்த்தாண்டம், ஏப்.12: மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ் (56). விவசாயி. சம்பவத்தன்று சகாயராஜூம் அவரது நண்பரான நிர்மல்குமார்(45) என்பவரும் இரவிபுதூர்- மார்த்தாண்டம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கல்லுத்தொட்டி பெட்ரோல் பல்க் அருகே வரும்போது சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது இவர்கள் மேல் அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த பைக் வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. அதில் தூக்கி வீசப்பட்ட 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சகாயராஜ் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது யார்? என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: