ரெட்டியார்சத்திரத்தில 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு

ரெட்டியார்சத்திரம், ஏப். 11: ரெட்டியார்சத்திரத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு கலை கல்லூரி சார்பில் பேரணி நடந்தது. பேருந்து நிலையம் முன்பு துவங்கிய இந்த பேரணி அரசு கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

கல்லூரி முதல்வர் ஜெயப்பிரதா தலைமை வகித்தார். பேரணியில் பங்கேற்றவர்கள் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். இதில் வருவாய் ஆய்வாளர் கண்ணன், கல்லூரி வணிகவியல் துறை தலைவர் சரவணன் மற்றும் மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: