திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி மனு: நீதிபதிகள் சரமாரி கேள்வி

 

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி மனுவில் “அரசியல் லாபம் அடைய, இதையே வேலையாக வைத்துள்ளீர்கள்; நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா?” என உயர் நீதிமன்றக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு சரமாரி கேள்வி எழுப்பினார். முதலில் ரூ.5 லட்சம் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட, மனுதாரரான கே.கே.ரமேஷ் “இனி இதுபோன்று மனுத்தாக்கல் செய்ய மாட்டேன்” என உறுதி அளிக்க, ரூ.50,000 அபாராதமும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவு அளித்துள்ளது.

Related Stories: