×

மானூர் அருகே அனுமதியின்றி சரள் மண் விற்றவர் கைது

மானூர், ஏப்.9: மானூர் அருகே உள்ள ரஸ்தா மெயின் ரோட்டில் ஒரு தனியார் நிறுவனத்தின் முன்பாக சரள் மண் குவிக்கப்பட்டு இருந்துள்ளது. இதுகுறித்து நெல்லை கோட்டாட்சியருக்கு தொலைபேசி மூலம் கிடைத்த தகவலின் பேரில் மானூர் வருவாய் மண்டல துணை வட்டாட்சியர் புவனேஸ்வரி என்பவர் கோட்டாட்சியர் உத்தரவுப்படி சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் சரள் மண் குவிக்கப்பட்ட இடத்தின் உரிமையாளரான குமார் என்பதும் மேற்படி சரள் மண்ணை ரஸ்தாவை சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் ரமேஷ்,(36). என்பவரிடமிருந்து, தான் கிரயம் கொடுத்து வாங்கியதாகவும் தெரிய வந்தது. இதுகுறித்து புவனேஸ்வரி மானூர் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த மானூர் போலீசார் உரிய அனுமதியின்றி சரள் மண் விற்பனை செய்ததாக ரமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Manur ,Rasta Main Road ,Nellai ,Kottatchiyar ,Manur Revenue Zone ,Deputy ,Tahsildar Bhuvaneswari… ,
× RELATED நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ரூ.2.25 லட்சம் சிக்கியது