×

ஒரே நாளில் 12 பேர் வேட்புமனு தாக்கல்

ஓசூர், ஏப்.7: ஓசூர் சட்டபேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக, நேற்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணரெட்டி, கூட்டணி கட்சியினருடன் வந்து சப் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆக்ருதி சேத்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக பாலகிருஷ்ணரெட்டியின் மனைவி ஜோதி, திமுக மாற்று வேட்பாளராக சுகுமாரன், தவாக சார்பில், விஜயகுமார், இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த காந்தி மற்றும் 7 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேலைக்கு சென்ற பெயிண்டர் திடீர் மாயம்கிருஷ்ணகிரி, ஏப்.7: கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(56). பெயிண்டரான இவர் கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணாதுரையின் மகன் அரவிந்த்ராஜ், கிருஷ்ணகிரி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Eastern District ,AIADMK ,Balakrishna Reddy ,Aakruthi Sethi ,Hosur Legislative Assembly ,
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு