*உலக சுகாதார தின விழாவில் ஆசிரியர்கள் கருத்து
முத்துப்பேட்டை : சுகாதாரத்தை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று உலக சுகாதார தின விழாவில் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் உலக சுகாதார தின விழா கொண்டாடப்பட்டுது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஆரோக்கிய அந்தோணிராஜ் தலைமை வகித்தார், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் முன்னிலை வகித்தார், உலக சுகாதார தின விழாவில் 2026ம் ஆண்டிற்கான நோக்கமாக சுகாதாரத்திற்காக ஒன்றுபடுவோம் அறிவியலுடன் நிற்போம் என்ற தலைப்பில் எடுத்துரைக்கப்பட்டது. உலக மக்கள் அனைவரும் அறிவியல் ஆதாரங்களை நம்பி ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்.
மனிதர், விலங்கு, சுற்றுச்சூழல் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் மருத்துவ முன்னேற்றங்கள் உலக நலனுக்கு பயன்பட வேண்டும். மனிதர்களின் வாழ்வின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது.
நல்ல உணவு, உடற்பயிற்சி, தூய்மை ஆகியவை நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். உலக சுகாதார அமைப்பு பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் பணிகளை ஈடுபட்டு வருகிறது. நாமும் அனைவரும் சுகாதாரத்தை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும். நோய்களை தடுத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க வேண்டும். இன்றைய உலகில் பல புதிய நோய்கள் உருவாகி கொண்டு இருக்கின்றன இத்தகைய சூழலில் அறிவியல் முன்னேற்றங்கள் மிகவும் அவசியமானவை மருத்துவ அறிவியல் வளர்ச்சியின் காரணமாக பல நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளித்து முடிகிறது. அதனால் தான் அறிவியலுடன் நிற்போம் என்று கூறப்படுகிறது. மேலும் ஒன்றுபடும் என்ற கருத்தும் மிகவும் முக்கியமானது.
நாம் ஒவ்வொருவரும் நமது ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். சுகாதாரத்திற்காக ஒன்றுபட்டு அறிவியலை நம்பி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம் என ஆசிரியர்கள் பேசினார்கள் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செல்வ சிதம்பரம், இளங்கோ, கரண்யா, சுகுணா மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
