திருக்கருக்காவூர் அருகே கோடை நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

*நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்

தஞ்சாவூர் : திருக்கருக்காவூர் அருகே கோடை நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வடமா நில தொழிலாளர்கள் நடவு பணியில் ஈடுபடுகிறார்கள்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, சாலியமங்கலம், இரும்புதலை, இடையிருப்பு, திருக்கருக்காவூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது கோடை நடவு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் நாற்று நடும் பணி உள்பட விவசாய பணிக்காக மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு இங்குள்ள கிராம பகுதியில் தங்கியிருந்து கடந்த சில வாரங்களாக நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து உள்ளூர் விவசாயிகள் கூறியதாவது; தற்போது அம்மாபேட்டை வட்டாரத்தில் சாலியமங்கலம், இரும்புதலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கோடை நடவு நடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூரில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஆட்கள் பற்றாகுறை காரணமாக நாற்று நடும் பணி உள்பட விவசாய பணிக்கு மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு விவசாயிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரும்பாலும் குறுவை, சம்பா, விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றா க்குறை ஏற்படும் காலங்களில் மட்டும் வடமாநில ங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு விவசாய பணிகளை செய்து முடிப்போம்.

ஆனால் தற்போது கோடை கால நெல் சாகு படிக்கும் கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால வடமாநில தொழிலாளர்களை வரவழைத்து விவசாய பணிகளை முடிக்க வேண்டி நிலை உள்ளதாக தெரிவித்தனர்.

வடமாநில தொழிலாளர்கள் தஞ்சை உள்பட டெல்டா பகுதியில் கோடை விவசாய பணிகளில் கடந்த சில ஆண்டுகளாக விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருவது உள்ளூர் விவசாய தொழிலாளர்களுக்கு பாதிப்பு என்றாலும் உள்ளூர் தொழிலாளர்கள் விவசாய வேலை செய்ய ஆர்வம் காட்டாததால், வேறு வழியின்றி வெளிமாநில தொழிலாளர்கள் மூலம் விவசாய பணிகள் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: