×

விழிப்புணர்வு பேரணி

தென்காசி, ஏப். 8: தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் கலெக்டர் கமல் கிஷோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அவர் தெரிவிக்கையில், ‘தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் குத்துக்கல்வலசை ரவுண்டானா பகுதியில் தொடங்கிய சைக்கிள் விழிப்புணர்வு பேரணி, பங்களா கணக்கபிள்ளை வலசை, சீவநல்லூர், இலத்தூர் வழியாக குத்துக்கல்வலசை ரவுண்டானா பகுதிக்கு வந்தடைந்தது. மிதிவண்டி பேரணியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நூறு சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வலியுறுத்தப்பட்டது.

 

Tags : Tenkasi ,Collector ,Kamal Kishore ,Kuthukkalwalasai ,Tamil Nadu Assembly ,
× RELATED போதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மருத்துவர்