×

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பணிகளை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

தென்காசி, ஏப்.8: தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் தென்காசி மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் நீரஜ்குமார், (கடையநல்லூர், தென்காசி), புவனேஷ் பிரதாப்சிங், (சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர்), ஈஷாபிரியா (ஆலங்குளம்) ஆகியோர் கலெக்டர் கமல்கிஷோர் தலைமையில் தேர்தல் தொடர்பாக அலுவலர்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் தேர்தல் தொடர்பாக விளம்பர பதிவேடுகள் பராமரிக்கும் செயல்பாடுகள் குறித்தும், வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையான கண்காணிப்புக்குழு, பறக்கும்படை அலுவலர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்புப் பணிகள் குறித்தும், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொடர்பு எண் 04633-1950 மூலம் 24 மணி நேரமும் பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான தகவல்களைப்பெறும் வகையில் சுழற்சி முறையில் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும்,

சி விஜில் செயல்பாடுகள் மற்றும் புகார் செய்திகள் குறித்தும் தென்காசி மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags : Tenkasi district ,Tenkasi ,Neerajkumar ,Kadaiyanallur ,Bhuvanesh Pratapsingh ,Sankarankoil ,Vasudevanallur ,Eesha Priya ,Alankulam ,Collector ,Kamal Kishore ,Election Control Center ,Tenkasi District Collectorate ,
× RELATED நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ரூ.2.25 லட்சம் சிக்கியது