நெல்லை,ஏப்.8: பேட்டை கலுங்கடித் தெருவைச் சேர்ந்த கொம்பையா கார்த்திக் (22). கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இவர் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுவந்தார். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ைகதுசெய்ய மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் கார்த்திக்கை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
