15 பேர் கைது பழைய இரும்பு, காகித கடைகளில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருச்சி, பிப். 19: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பழைய இரும்பு கடைகள், பழைய காகித கடைகள், நெகிழி கடைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் கடைகள் பராமரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் எதிர்வரும் கோடை காலங்களில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை ஆகியவை தீயணைப்பு துறையினரால் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு உபகரணங்களை தங்களது கடைகளில் நிறுவுவதாக வியாபாரிகள் உறுதியளித்தனர். மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், நகர்நல அலுவலர் யாழினி, தியாகராஜன், நிலைய அலுவலர், தீத்தடுப்பு குழு, தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் காயலாங்கடை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: