சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.13,860க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.255க்கு விற்பனை ஆகிறது.
