ஜெயங்கொண்டம் அடுத்த மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சிக்காக தூய்மை பணிகள் தீவிரம்

ஜெயங்கொண்டம், பிப்.19: கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இடம் தேர்வுக்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் தொடங்கி கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 2020- 21 ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்து இருந்தது. அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் நேற்று மாளிகை மேட்டில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடாக மண்டி கிடக்கும் புல் புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆய்வு மேற் கொள்வதற்காக அப்பகுதிகளில் மண்டிக்கிடக்கும் புல்பூண்டுகளை அகற்றும் பணி கடந்த இரண்டு நாட்களாக துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தொல்லியல் துறை அலுவலர்கள் நந்தகுமார் பாக்கியலட்சுமி, மற்றும் ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

Related Stories: