×

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நாசரேத் கல்லூரியில் மாணவர்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு

நாசரேத், ஏப். 7: நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நாசரேத் கல்லூரியில் மாணவ- மாணவியருக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரி மாணவ- மாணவியருக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏரல் தாசில்தாரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான செல்வக்குமார் தலைமை வகித்து மாணவ- மாணவியருக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். இதில் நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன், கல்லூரி முதல்வர் சோபியா ஞானமேரி, கிராம உதவியாளர் சத்தியசீலன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags : Nazareth College ,Nazareth ,Tamil Nadu ,Thoothukudi ,
× RELATED போதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மருத்துவர்