என்னுடன் நடை போட்டிக்கு எடப்பாடி தயாரா?: துரைமுருகன் சவால்

வேலூர்: காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் போட்டியிடுகிறார். இவர் இன்று தாலுகா அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார். மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் துரைமுருகனிடம், ஆரணியில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது.

அவரால் நடக்க முடியவில்லை. பெருமைக்காக போட்டியிடுகிறார் என பேசியிருந்தாரே? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், எடப்பாடி பேசும் பொய்களில் இதுவும் ஒன்று. வேண்டும் என்றால் என்னுடன் நடைபோட்டி பந்தயத்திற்கு எடப்பாடியை வரச்சொல்லுங்கள் பார்ப்போம் என்றார்.

Related Stories: