கந்தர்வகோட்டை சிவன் கோயிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி

கந்தர்வகோட்டை, ஏப்.6: கந்தர்வகோட்டை சிவன் கோயிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சாகேஸ்வரர் ஆலயத்தில் மாணிக்கவாசகர் அருளிச் செய்த எட்டாம் திருமுறை திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஆலய மூலவருக்கு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சிறப்பு பஜனை பக்தர்கள் செய்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பட்டுக்கோட்டை, நெய்வேலி, திருவோணம், கறம்பக்குடி, புதுக்கோட்டை போன்ற நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைந்து அடியார்களுக்கும் ஆறு சுவை அன்னதானம் வழங்கப்பட்டது. அனைந்து ஏற்பாடுகளையும் கந்தர்வகோட்டை சிவனாடியார்கள் செய்திருந்தனர். முற்றோதல் நிகழ்ச்சியில் பஞ்சபுராணம் ஒப்பித்த சிவ அடியார்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கபட்டது. நடைபெற்ற அரசு பொது தேர்வான பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதல் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவ- மாணவிகள் நல்லமுறையில் தேர்வு எழுதி கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என அடியார்கள் பிராத்தனை செய்தனார்.

 

 

Related Stories: