கஞ்சா விற்பனை, போக்சோ வழக்கில் சிக்கிய 2பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

நெல்லை, ஏப்.6: நெல்லை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, போக்சோ வழக்கில் தொடர்புடைய 2 பேரை தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் தண்டையார்குளம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் முருகன் (37) என்பவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் பணகுடி போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது போன்று கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம், சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த முருகன் மகன் முத்துகுமார் (29) என்பவரை போக்சோ வழக்கின் கீழ் வள்ளியூர் மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனால் முருகன், முத்துகுமார் ஆகியோரை தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாவட்ட எஸ்பி பிரசண்ணகுமார், இன்ஸ்பெக்டர்கள் பணகுடி, ராஜாராம், வள்ளியூர் மகளிர் காவல் நிலைய சாந்தி ஆகியோர் நெல்லை கலெக்டர் சுகுமாரிடம் பரிந்துரைத்தனர். இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீசார் நேற்று பாளை மத்திய சிறையில் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் முருகன், முத்துகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

 

Related Stories: