சுட்டெரிக்கும் கோடை வெயிலால் குளிர்பானங்கள் விற்பனை மும்முரம்

ஸ்பிக்நகர், ஏப். 6: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம், ஸ்பிக்நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயில் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வெளியில் வந்தால் ஏதாவது குளிர்பானம் அல்லது குளிர்ந்த தண்ணீரையே குடிக்க வேண்டும் என்ற அளவுக்கு நாக்கு வறண்டு விடுகிறது.

இதன் காரணமாக தர்பூசணி, இளநீர், கரும்பு ஜூஸ், மோர், கம்மங் கூழ் விற்பனை சூடுபிடித்துள்ளது. இளநீர் விற்பனையும் மும்முரமாக நடக்கிறது. தர்பூசணி சாப்பிடுவதால் மனித உடலுக்கு தேவையான தண்ணீர் சத்து கிடைப்பதால் கோடை காலத்திற்கு ஏற்றதாக உள்ள தர்பூசணியை பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். வரும் நாட்களில் அனலின் தாக்கம் மேலும் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் சாலையோர குளிர்பான கடைகள் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Stories: