சீர்காழி அருகே டூவீலரில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.64,300 பறிமுதல்

சீர்காழி, ஏப்.6: சீர்காழி தனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கருகாவூர்- செம்மங்குடி சாலையில் பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் நேற்று ரூ.64,300 பறிமுதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி (தனி) சட்டமன்றத் தொகுதி, பறக்கும் படை-4, தனி வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் சீர்காழி வட்டம் திருக்கருகாவூர்- செம்மங்குடி சாலையில் வாகன தணிக்கை நடத்தினர்.

இதில் சீர்காழி வட்டம், ராதாநல்லூர், பெரிய தெரு முகவரியை சேர்ந்த விஷ்ணுகுமார் த/பெ. வாசுதேவன் என்பவர் வந்த இரு சக்கர வாகனத்தை ஆய்வு செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.64,300 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்த பணம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை இடத்து தனி தாசில்தார் பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 

Related Stories: