கொள்ளிடம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.7,34,200 பறிமுதல்

கொள்ளிடம், ஏப்.6: கொள்ளிடம் அருகே சட்டசபை தேர்தலை முன்னிட்டு பறக்கும்படை நடத்திய சோதனையில் இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடு த்து வந்த ரூ.7,34,200 பறிமுதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் பஸ் நிறுத்தம் அருகே சீர்காழி சட்டசபை தொகுதி நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் தினகர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தாண்டவன்குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் பழையாறு நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார். அவரது இரு வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.7,34,200ரொக் கத்தை கைப்பற்றி அதனை சீர்காழி தாலுகா அலுவலகத்தில் தலைமை இடத்து துணை தாசில்தார் பாபுவிடம் ஒப்படைத்தனர். பின்னர் சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Related Stories: