×

பெரும்பாறை அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்

 

பட்டிவீரன்பட்டி, ஏப். 6: ஆத்தூர் தாலுகா சித்தரேவு பகுதியை சேர்ந்தவர் ரவி (55). கூலித்தொழிலாளி. பெரும்பாறை அருகே உள்ள கொங்கப்பட்டி மலைப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். இதன்படி நேற்று அவர் காபி தோட்டத்திற்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அருகில் உள்ள புதருக்குள் இருந்து திடீரென வெளியே வந்த காட்டெருமை ரவியை முட்டித்தள்ளியது.
இதில் படுகாயமடைந்த அவர் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து காட்டெருமையை அங்கிருந்து விரட்டினர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, வத்தலக்குண்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Perumbarai ,Pattiveeranpatti ,Ravi ,Chittarevu ,Attur taluka ,Kongapatti hills ,
× RELATED காங்கயத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி