×

மூணாறு குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் முகாம்

 

மூணாறு, ஏப்.6: மூணாறில் குடியிருப்பு மற்றும் தோட்டப்பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டுயானை கூட்டத்தால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
கேரள மாநிலம் மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக தேவிகுளம், கன்னிமலை, கடலார் போன்ற எஸ்ட்டேட் பகுதியில் முகாமிட்டிருக்கும் காட்டு யானைகளின் கூட்டத்தால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லமுடியாமல் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரவு நேரத்தில் தொழிலாளர் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகள் அங்குள்ள குடிநீர் குழாய்கள், விவசாய பயிர்கள் என அனைத்தையும் சேதப்படுத்தி வருகின்றன. அதேபோன்று பெரியவாரை மற்றும் நல்லதண்ணி எஸ்டேட் பகுதியில் நடமாடும் படையப்பா என்ற காட்டு ஒற்றை ஆண் யானை அப்பகுதியில் உள்ள வாழை, பீன்ஸ், காரட் உள்ளிட்ட பயிர்களை அழித்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால் காட்டு யானை தாக்குதலுக்கு தீர்வு காண வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோட்ட தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Munnar ,Kerala ,Devikulam ,
× RELATED காங்கயத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி