×

ஏர்வாடியில் அரசு பெண்கள் பள்ளி மலேசியா பாண்டியன் பேச்சு

 

 

சாயல்குடி, ஏப்.6:ஏர்வாடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மலேசியா பாண்டியன் பேசினார்.
முதுகுளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வளநாடு, தெய்வதானம், செங்கற்படை, மட்டியரேந்தல் தாழியரேந்தல், கடம்போடை,பூசேரி ஆதங்கொத்தங்குடி பெரியஇலை ஏர்வாடி, சின்ன ஏர்வாடி, ஆதம்சேரி, சேரந்தை, தனிச்சியம், தத்தங்குடி உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மலேசியா பாண்டியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசும்போது, கிராமங்கள் தோறும் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்றார். தொடர்ந்து சாயல்குடி கிழக்கு ஒன்றியத்தில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது ஏர்வாடி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும், ஏர்வாடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படும். சடையன் முனியன் வலசையில் சமுதாயக்கூடம் அமைக்கப்படும் என்
றார்.
உடன் தொகுதி பொறுப்பாளர் எம்.பி தர்மர், தொகுதி பொறுப்பாளர் நாகேந்திர சேதுபதி,அதிமுக சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரவீன்குமார், முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செய
லாளர் கருப்புசாமி மற்றும் என்டிஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Government Girls' School ,Airavadi, ,Malaysia Pandian ,Sayalgudi ,AIADMK ,Mudukulathur ,Airavadi ,Mudukulathur union ,Valanadu ,Deivathanam ,Chengalpadai ,Matiyarenthal Thazhiyarenthal ,Kadambodai ,Pooseri ,Athangothangudi ,Periyailai Airavadi ,Chinna… ,
× RELATED காங்கயத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி