×

பங்குனி பொங்கல் திருவிழா

 

சிவகாசி, ஏப்.6: சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாட்களிலும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.
திருவிழாவின் முக்கிய பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மன் குதிரை வாகனத்தில் முப்பிடாரி அம்மன் கோயில் முன் வேட்டைக்கு செல்லுதல் நடைபெற்றது.
இன்று நடைபெறும் 9ம் நாள் திருவிழாவில் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றியதற்காக அம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தும், கயர் குத்து, முடிக்காணிக்கை, முத்துகாணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை ஆகிய நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். 10ம் திருவிழாவில் தேர் வடம் தொடுதலும், தேர் இழுத்தல் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : Panguni Pongal Festival ,Sivakasi ,Tiruthangal Mariamman Temple ,Amman… ,
× RELATED காங்கயத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி